பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, 2026 செப்டம்பர் 02 ஆம் திகதி ஜிக்மே சிங்கே வாங்சுக் சட்டக் கல்லூரிக்கு (Jigme Singye Wangchuck School of Law – JSW Law) விஜயம் செய்தார்.
இவ்விஜயத்தின் மூலம் சட்டக் கல்வி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சட்டத் துறையின் தொழில்முறை வளர்ச்சி தொடர்பில் அக்கல்லூரி மேற்கொண்டுவரும் பணிகள் குறித்துப் புரிதலைப் பெற்றுக்கொண்டதோடு, இலங்கை மற்றும் பூட்டானின் சட்ட முறைமைகள் மற்றும் நீதித்துறைப் பாரம்பரியங்கள் குறித்துக் கருத்துகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
சட்டக் கல்வித் துறையின் ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்வதை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கல்விசார் பரிமாற்றத் திட்டங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மற்றும் சட்ட, நீதித்துறைக் கல்வி தொடர்பான அனுபவங்கள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.