‘புலி’ படத்திற்கு பெற்ற சம்பளத்தை நடிகர் விஜய் வருமானமாகக் காட்டவில்லை!

‘புலி’ படத்திற்கு விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை, வருமானமாக காட்டவில்லை என வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று வௌ்ளிக்கிழமை (06) தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பில், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வருமானத்தை கணக்கில் காட்டாததால், ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து கடந்த 2022ம் ஆண்டு விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, 2015-16ஆம் ஆண்டில் விஜய் தனது வருமானம் ரூ.35.42 கோடி என வருமான வரித்துறை இடம் காட்டி இருந்தார். ரெய்டில் கைப்பற்ற ஆவணங்களுடன், அவர் தாக்கல் செய்த கணக்குகளை வருமான வரித்துறையினர் ஒப்பிட்டு பார்த்தனர்.

அப்போதுதான் விஜய் ரூ.15 கோடியை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ‘புலி’ திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட ரூ.15 கோடி பணத்தை அவர் தனது வருமான கணக்கில் காட்டாமல் மறைத்திருந்தார். இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் போட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

எல்லாம் ஓகே தான்.. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் திகதி முன்னதாக அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் தாமதப்படுத்திவிட்டு 2022 ஆம் ஆண்டில் தான் வருமான வரித்துறையினர் அபராதம் விகித்திருக்கின்றனர். இது சட்டப்படி தவறு என்று, விஜய் வருமான வரித்துறையினரின் இந்த அபராத உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எதிர்த் தரப்பில் ஆஜரான வருமான வரித்துறை, எங்கள் தரப்பில் உரிய காலத்தில் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. விஜய் தக்கல் செய்திருந்த மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் வழங்கிய அமர்வு முன்பாக இறுதி விசாரணை நடைபெற்று, தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தீர்ப்பில், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்றும், அபராத தொகையை செலுத்த வேண்டும் எனவும் கூறி, விஜய்யின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்