புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியவர் கைது

புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியதாகக் கூறப்படும் நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ, வேவா வீதியைச் சேர்ந்த 39 வயது சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான கொரிய நாட்டவரான 27 வயதுடைய கிம் சிங் ஹியோங் மரவில அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளனவர் வென்னப்புவ, சார்லஸ் வில்லியம் மாவத்தையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார். அத்துடன் அவர் அருகிலுள்ள தேவாலயத்தில் கற்பித்து வந்துள்ளார்.

16 ஆம் திகதி சந்தேக நபர் அனுமதியின்றி தேவாலய வழிபாட்டில் கலந்து கொண்டு, தேவாலயத்தின் பராமரிப்பாளர் என்று கூறப்படும் கொரியப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

17 ஆம் திகதி, தாக்குதலுக்குள்ளான கொரிய நாட்டவர் வென்னப்புவ நகரில் தேவாலயத்திற்கு நாற்காலிகள் வாங்கச் சென்றதாகவும், முந்தைய நாள் தேவாலயத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் சந்தேக நபர், கொரிய நாட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

bri

‘உலகளாவிய கிளர்ச்சி’ முழக்கத்தை எழுப்புபவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

December 18, 2025

பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், ‘இன்டிபாடா’ (Intifada – உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள்

navee

சிட்னி தாக்குதல் பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்டார்!

December 18, 2025

ஆஸ்திரேலியாவில், ‘ஹனுக்கா’ நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்ட நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட 59

in ru

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தவறான பாதையில் செல்வதை இந்தியா எடுத்துச் சொல்ல வேண்டும் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா –

put

ஐரோப்பாவை கடுமையாக எச்சரிக்கும் புடின்

December 18, 2025

உக்ரைன் விவகாரத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாரில்லை எனவும் நிலங்களை பலவந்தமாக கைப்பற்ற தயங்கப் போவதில்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி

sim

சிம்பு -ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி?

December 18, 2025

சிலம்பரசன் தற்சமயம் தனது 49 ஆவது திரைப்படமான அரசன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தற்போது

pac

திரைப்பட விருதிற்கான நடுவர் குழு தெரிவு

December 18, 2025

திரைப்படத் துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு தனியார் அமைப்புகள்

raja

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’

December 18, 2025

நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சஹானா சஹானா’ எனும்

vaa va

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ வெளியாவதில் சிக்கல்…

December 18, 2025

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின்

toro

டொராண்டோவில் நிலப்பரிமாற்ற வரியை உயர்த்த தீர்மானம்?

December 18, 2025

டொராண்டோ மாநகரில் 3 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள சொகுசு வீடுகளை வாங்குபவர்களுக்கான, நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax)

crim

2017 இல் கனடா கியூபெக்கில் இடம்பெற்ற சிறுமியின் மரணம் குறித்த இறுதி அறிக்கை!

December 18, 2025

கியூபெக் மாகாணத்தில் 2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற 7 வயது சிறுமியின் மரணம் குறித்து, மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல்

cana_en

கனடாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்ற இலக்கை எட்ட முடியாது?

December 18, 2025

ஒட்டாவா, கனடா — 2030-ஆம் ஆண்டிற்குள் கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க வேண்டும் என்ற இலக்கை,

warnig

கண்டி – நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

December 18, 2025

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.