புதிய தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

இன்று தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பின்வருமாறு.

1. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின் Ms. Isabelle Marie Catherine Martin, High Commissioner of Canada, based in Colombo

2. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே ஜேக்கப் டி போயர். Mr. Wiebe Jakob De Boer, Ambassador of the Kingdom of the Netherlands, based in Colombo.

3. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெதிவ் ஜோன் டக்வேர்த். Mr. Matthew John Duckworth, High Commissioner of the Commonwealth of Australia, based in Colombo.

4. புது டில்லியை தளமாகக் கொண்டு பணியாற்றும் அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர் அப்துநோர் ஹொலிஃபி. Mr. Abdenor Khelifi, Ambassador of the People’s Democratic Republic of Algeria, based in New Delhi.

5. புது டில்லியை தளமாகக் கொண்டு பணியாற்றும் ஐஸ்லாந்து குடியரசின் தூதுவர் பெனடிக்ட் ஹஸ்குல்ட்சன்.Mr. Benedikt Höskuldsson, Ambassador of the Republic of Iceland, based in New Delhi.

இராஜதந்திரிகளை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By C.G.Prashanthan

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்

nug

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

November 17, 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

uthaya

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

November 17, 2025

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை