அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவையின் அதிவிசேட தர அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.
மத்துகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட அனுபம மங்கள விக்ரமாராச்சி, மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
நிர்வாகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், இதற்கு முன்னர் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் ஆணையாளராக செயலாற்றியுள்ளார்.