புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார் கரிசனைகளை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக், இக்கரிசனைகள் தொடர்பில் இன்று புதன்கிழமை (4) அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (3) மு.ப 11.00 மணிக்கு கொழும்பிலுள்ள ஷங்கரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கான அந்நாட்டுத்தூதுவர் மே-எலின் ஸ்டேனரும் தமிழரசுக்கட்சி சார்பில் அதன் பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாணசபைத்தேர்தல்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அதன்படி தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு ஏன் அவசியம் என நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்த தமிழ்ப்பிரதிநிதிகள், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போது அரசாங்கத்தினாலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளினாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் (தனித்தனியாக) நடவடிக்கைகள் என்பன குறித்து விளக்கமளித்தனர்.

அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்கள் காலதாமதமின்றி நடாத்தப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், தற்போதுவரை இத்தேர்தலை நடாத்துவதில் இழுத்தடிப்புக்கள் தொடர்வதாக விசனம் வெளியிட்டனர்.

அதுமாத்திரமன்றி மாகாணசபைத்தேர்தலை உடன் நடாத்துவதை முன்னிறுத்தி சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதுடன் இவ்விடயங்கள் தொடர்பில் நோர்வே இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.

அதேவேளை யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை இன்னமும் கண்டறியப்படவில்லை என சுட்டிக்காட்டிய சுமந்திரன், செம்மணி உள்ளடங்கலாக அண்மைய காலங்களில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் அவை சார்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தினார்.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்குக்கொண்டுவரல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் உரியவாறு நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் கரிசனை வெளியிட்டனர்.

அவற்றை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர், இன்றைய தினம் (4) அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவிருப்பதாகவும், அச்சந்திப்புக்களின்போது இக்கரிசனைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்