புகையிரத சேவையில் நெருக்கடி; சரியான அதிகாரியைத் துரிதமாக நியமியுங்கள்!

அரச நிர்வாக சேவையின் அதிகாரி ஒருவரை புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளராக நியமித்துள்ளதால் புகையிரத சேவையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

தித்வா புயல் தாக்கத்தால் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாக புனரமைத்து, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவதற்கு பொதுமுகாமையாளர் பதவியில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற பொறியியலாளர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்குமாறு வலியுறுத்துகிறோம். மலையக புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பதற்கு புனரமைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.

புகையிரத நிலைய அதிபர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தித்வா புயல் தாக்கத்தால் ஏனைய அரச திணைக்களங்களை காட்டிலும் புகையிரதத் திணைக்களம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரியதொரு பங்களிப்பு வழங்கும் மலையக புகையிரத பாதை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.பிரதான புகையிரத பாதையில் றம்புக்கனை புகையிரத நிலையத்துக்கு அப்பால் புகையிரத சேவை முன்னெடுக்கப்படாத காரணத்தால் பொதுப்பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

இதனால் புகையிரதத்துக்கு ஒரு மாதத்துக்கு செலவழித்த பணத்தை, பேருந்து சேவையை பயன்படுத்துவதால் ஓரிரு நாட்களுக்கு செலவழிக்க வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.இதனால் பொதுபயணிகள் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சேதமடைந்த பேராதனை புகையிரத பாலத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் இரட்டை பாலத்தை நிர்மானிப்பதற்கு யோசனை முன்வைத்திருந்தாலும்,பின்னர் பழைய பாலத்தை புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இவ்வாறான நிலையில் கண்டிக்கான புகையிரத சேவையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. இருப்பினும் தொழில்நுட்ப நெருக்கடிகள், சீரற்ற காலநிலை ஆகிய காரணிகளால் பேராதனை புகையிரத பாலம் நிர்மாணிப்பு பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே இந்த பாலத்தை புனரமைப்பது தொடர்பில் மீண்டும் ஒரு அறிக்கையை புகையிரத திணைக்களம் உரிய தரப்பினர்களிடம் கோரியுள்ளது.

றம்புக்களை முதல் கடுவன்னாவ வரையினால புகையிரத பாதத்தை புனரமைப்பதற்கு இதுவரையில் எவ்வித திட்டங்களும் தயாரிக்கப்படவில்லை.புகையிரத வீதி பராமரிப்பு, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவது உள்ளிட்ட சகல பணிகளும் தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரின் செயற்பாடுகள் முரண்பட்டதாக காணப்படுகிறது.புகையிரத போக்குவரத்து சேவையை குறைத்துவிட்டு புகையிரத திணைக்களம் இலாபமடைகிறது என்று பொதுமுகாமையாளர் குறிப்பிடுகிறார்.சக அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறாமல் இவர் தன்னிச்சையாக செயற்படுவதால் அரசாங்கமும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுடன், பொதுபயணிகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

அரச நிர்வாக சேவையின் அதிகாரி ஒருவரை புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளராக நியமித்துள்ளதால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.தித்வா புயல் தாக்கத்தால் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாக புனரமைத்து, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவதற்கு பொதுமுகாமையாளர் பதவியில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற பொறியியலாளர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்குமாறு வலியுறுத்துகிறோம்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்