5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டனைக்கு உள்ளாக்குதல் மற்றும் உளவியல் ரீதியாகத் துன்புறுத்துதல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அது வலியுறுத்துகிறது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிறுவர் துஷ்பிரயோகத்தின் கீழ் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்களாகும் என்பதால், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக உச்சக்கட்டச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.