இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்தின் அணித்தலைவராக மிஷெல் பிறேஸ்வெல் பெயரிடப்பட்டுள்ளார்.
மிற்செல் சான்ட்னெர், மற் ஹென்றி ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து வருவதன் காரணமாகவும், கேன் வில்லியம்சன் எஸ்.ஏ20 தொடரில் பங்கேற்பதன் காரணமாகவும், மூன்றாவது குழந்தை பிறப்பதன் காரணமாக டொம் லேதமும் குழாமில் இடம்பெறவில்லை.
தவிர றஷின் றவீந்திர, ஜேக்கப் டஃபிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
குழாம்: மிஷெல் பிறேஸ்வெல் (அணித்தலைவர்), ஆதித்யா அஷோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜொஷ் கிளார்க்சன், டெவொன் கொன்வே, ஸக் போக்ஸ், மிற்ச் ஹே (விக்கெட் காப்பாளர்), கைல் ஜேமிஸன், நிக் கெல்லி, ஜேடன் லென்னொக்ஸ், டரைல் மிற்செல், ஹென்றி நிக்கொல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கல் றே, வில் யங்க்.
இந்நிலையில் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் பிற்பகுதிகளில் லொக்கி பெர்கியூசன், அடம் மில்ன், பின் அலென், டிம் செய்ஃபேர் ஆகியோர் குழாமில் இணைவதோடு, வில்லியம் ஓ ருர்க், நாதன் ஸ்மித், பிளையர் டிக்னர் ஆகியோர் இரண்டு குழாம்களிலும் இடம்பெறவில்லை.