பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது பாலியல் வல்லுறவு: டிக்கோயா வைத்தியசாலையில் சர்ச்சை

ஹட்டன் – டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் யுவதியின் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், மூன்று மருத்துவமனை ஊழியர்கள் நான்கு முறை பிணவறைக்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் இருந்த இறந்த இளம் பெண்ணின் சடலத்தை மூன்று மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தக் கோரி, இறந்த இளம் பெண்ணின் தாயார் நேற்று (06.03.2026) நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்திக்கச் சென்றபோது, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா காட்சிகள் அவருக்குக் காண்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே மூன்று மருத்துவமனை ஊழியர்கள் பிணவறைக்குச் சென்று, குறுகிய நேரத்திலேயே வெளியேறும் காட்சிகள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் பிரேத அறையில் யுவதியின் சடலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற வாய்ப்பில்லை என்று பணிப்பாளர் தெரிவித்ததாகவும் யுவதியின் தாயார் கூறியுள்ளார்.

எனினும் மருத்துவமனையின் முன் கடந்த இரண்டு நாட்களில் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் போது மருத்துவமனையில் பணிப்பாளர் வேறு ஒரு கதையைச் சொன்னதால், சம்பவம் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக அவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (06.03.2026) அவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தபோது, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், நுவரெலியா மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர், ஹட்டன் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் நிஸ்ஸங்க கொடமுன்ன மற்றும் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் மருத்துவமனை வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஞ்சுள சுரவீர ஆராச்சி, குறித்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் ஹட்டன் பொலிஸார் தனித்தனியாக இரண்டு விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளும் சரிபார்க்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த காட்சிகளின் அடிப்படையில், மூன்று மருத்துவமனை ஊழியர்கள் நான்கு சந்தர்ப்பங்களில் பிணவறைக்குள் சென்று, குறுகிய நேரத்திற்குள் வெளியே வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் பிணவறை முறையாக பூட்டப்படாமல் இருந்ததுடன், சாவியும் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று, பிரேத பரிசோதனை நடைபெறும் வரை உடல்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வசதிகள் மருத்துவமனையில் இருந்தபோதிலும், குறித்த யுவதியின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படாமல் இருந்தது சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று மருத்துவமனை ஊழியர்களும் எந்தவொரு காரணத்திற்காக பிணவறைக்குச் சென்றனர் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த மூன்று ஊழியர்களும் தற்காலிகமாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.

mazooth

பிராந்திய நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

March 7, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி

nep

நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு?

March 7, 2026

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை

ban

தெஹ்ரானில் அமைந்துள்ள கமேனியின் பிரம்மாண்ட நிலத்தடிப் பதுங்கு குழி அழிப்பு

March 7, 2026

தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய

padd

பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள குற்றவாளி பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு

March 7, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு

thaya

சுரேஷ் சாலேவை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி

March 7, 2026

பொலிஸ் அறிக்கை ஒன்றை எடுத்து வராத எந்த நபருக்கும், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)

Her

கனடாவில் ஐரிஷ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம்!

March 7, 2026

பிராம்ப்டன் நகரம் – ஐரிஷ் பாரம்பரிய மாதத்தை கொண்டாட குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிராம்ப்டன் நகரம் மற்றும் Rovers Club

gol

உலக சந்தையில் தங்க விலை மாற்றம்?

March 7, 2026

உலக சந்தையில் இன்றைய தினம் (07.03.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5170 முதல் 5190 வரை உள்ளதாக தகவல்கள்

dic

பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது பாலியல் வல்லுறவு: டிக்கோயா வைத்தியசாலையில் சர்ச்சை

March 7, 2026

ஹட்டன் – டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் யுவதியின் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், மூன்று

Brom

பிராம்டனில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் – நகராட்சி எச்சரிக்கை

March 7, 2026

பிராம்டன், ஒன்டாரியோ பகுதிகளில் பகல் நேர வெப்பநிலைகள் உயரத் தொடங்கியுள்ளதால், உருகும் பனி மற்றும் ஆற்றில் உள்ள பனிக்கட்டிகள் மழையுடன்

dau

மிசிசாகாவில் பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

March 7, 2026

026 பிரிமியர்ஸ் கப் பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று மிசிசாகாவில் நடைபெற்றது.மேற்படி கிரிக்கெட் போட்டியில் மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும்

veh

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்து…

March 7, 2026

வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என வாகன

ir

இலங்கைக் கடற்பரப்பில் வெடித்து சிதறிய கப்பவில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது

March 7, 2026

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி