பிரித்தானியாவில் இடம்பெற்ற கேக் போட்டியில் கலந்துகொண்ட முதல் ஈழத்தமிழர்

2025இற்கான Cake International competition நிகழ்வானது கடந்த 31ஆம் திகதி முதல் நேற்று வரை பிரித்தானியாவிலுள்ள பேர்மிங்கம் நகரிலுள்ள National Exhibition centre (NEC)இல் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் 7000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல பிரிவுகளிலும் கலந்து கொண்டுள்ளனர். 1994ஆம் ஆண்டு International Craft & Hobby Fair Ltd என்ற நிறுவனம் Cake Established என்ற பெயரில் தொடங்கப்பட்டு 1996ஆம் ஆண்டு Cake International (CI) ஆக சர்வதேச அளவில் விரிவாக்கியது.

பின்னர் 2000 ஆண்டளவில் சர்வதேசப் புகழ் வாய்ந்த கேக் போட்டியாக இது மாறியது.

2024 ஆண்டு Cake International competition தொடங்கப்பட்ட 30ஆவது ஆண்டு விழா (30 Years of CI) பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

2025 ஆம் ஆண்டு இந்த Cake International competition நிகழ்வானது 31ஆவது வருடமாக நடப்பதுடன் அது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து “Cake International and Bake International Awards” என இரு பிரிவுகளாக முதல் முறையாக நடத்தப்படுகிறது.

இன்று பல பிரிவுகளாக பல பெயர்களில் ஜப்பான், டுபாய், அமெரிக்கா, இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நிலையில் Head of Cake International Shows” என்று இந்த போட்டி அழைக்கப்படுகின்றது. சர்வதேச புகழ்வாய்ந்த Cake International competition நிகழ்வாக இந்நிகழ்வு திகழ்கிறது.

1996 இல் இந்த Cake International competition சர்வதேச மயப்பட்டதனால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டாலும் 1997ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கலந்து கொண்ட Mr.R.Climent என்பவர் பல கோல்ட் மெடல்களை பெற்றுக்கொண்டார். இவரே பிரித்தானியா தவிர்ந்த வெளி நாடுகளிலிருந்து கலந்து கொண்டு கோல்ட் மெடல் பெற்ற முதலாவது போட்டியாளராவார்.

1997 இலிருந்து 2004 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக கோல் பல மெடல்களை வென்று கேக் இன்ரநசனல் பதிவுப் புத்தகத்தில் உலகச் சாதனையாளராக பதியப்பட்டதுடன் அந்தக்கால பிரித்தானிய பிரதமராக இருந்த ரொனி பிளேயரிடம் பாராட்டும் நினைவுப் பரிசும் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

சில காலங்கள் பிரித்தானிய பத்திரிகைகளை ஆக்கிரமித்த நபராக D.R.Climent இருந்தாரென்பதும். இவர் ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்தவரென்பதும் மேலதிக தகவல்களாகும்.

இவரின் பின் பல சிங்கள, முஸ்லிம் போட்டியாளர்கள் இன்றுவரை பங்குபற்றி வருகின்றனர். இருந்தபோதிலும் ஈழத்தமிழர்கள் இதன் கடந்த 30 வருட வரலாற்றில் பங்குபற்றியிருக்கவில்லை.

31ஆவது வருடமாக நடைபெறும் Cake International competition show 2025இல் லண்டனைச் சேர்ந்த மதிவதனி மயூரன் பங்குபற்றி கோல்ட் உட்பட 5 மெடல்களையும் பெற்றுக்கொண்டார்.

31வது வருட Cake International போட்டியில் பங்குபற்றி போட்டியிட்ட முதலாவதாக ஈழத்தமிழர் இவராவார். இவர், கேக் வரலாற்றில் முதலாவது உலக சம்பியனான Mr.R.Climentஇன் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி

Selva

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

March 6, 2026

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக,

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12