முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார்.
ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான் பிறீயைத் தொடர்ந்தே 423 புள்ளிகளைப் பெற்று பிரித்தானியாவின் நொரிஸ் சம்பியனானார்.
றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் நொரிஸை விட 2 புள்ளிகளே குறைவாக 421 புள்ளிகளைப் பெற்றதோடு, நொரிஸின் சக மக்லரன் அணி ஓட்டுநரான ஒஸ்கார் பியாஸ்திரி 410 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.
அபு தாபியில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் முதலாமிடத்தைப் பெற்றிருந்தார். பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நொரிஸ் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.