கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.