சீனாவுக்கு மூன்று நாள் பயணம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சற்கரை சந்தித்து உரையாடியுள்ளார். இச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.
தொழிநுட்ப உதவி உள்ளிட்ட பல ஒத்துழைப்பு செயற்பாடுகளில் இந்தியா இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளித்துள்ளதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.
இச் சந்திப்பு தொடர்பாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை ஆரம்பித்தார்.