யாழ்ப்பாணத்தில் மூன்று மாதமே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பால் குடித்துவிட்டு உறங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதிப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாயார் நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணியளவில் குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார். பின்னர் காலை 6 மணியளவில் குழந்தையைப் பார்த்தபோது, மூக்கின் வழியாகப் பால் வெளிவந்த நிலையில் குழந்தை விறைத்துக் காணப்பட்டுள்ளது.
பதற்றமடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
குழந்தையின் உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில், அக்குழந்தை நிமோனியா (Pneumonia) பாதிப்பு காரணமாக உயிரிழந்திருப்பது தெரியவந்தது.