பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணையில் டொராண்டோவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் ‘ப்ளூர் வீதி மேற்கு’ (Bloor Street West) மற்றும் ‘சென்ட் ஜார்ஜ் வீதி’ (St. George Street) பகுதியில் நடந்ததாகக் டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 2ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில், ‘கிங் வீதி மேற்கு’ (King Street West) மற்றும் ‘போர்ட்லேண்ட் வீதி’ (Portland Street) அருகே வைத்து இவ்விருவரும் இரண்டு பெண்களைச் சந்தித்துள்ளனர்.
பின்னர், அப்பெண்களை வற்புறுத்தி ‘ப்ளூர்’ மற்றும் ‘சென்ட் ஜார்ஜ்’ பகுதிக்கு அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
விசாரணையின் முடிவில், டொராண்டோவைச் சேர்ந்த கியா சயீத் (23 – Kiya Sayeed) கைது செய்யப்பட்டு, அவர் மீது கீழ்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
தாக்குதல் / மூச்சுத்திணறடித்தல் (Assault / Choking)
-
பாலியல் நோக்கத்திற்காக இரகசியமாகக் கண்காணித்தல் / பதிவு செய்தல் (2 வழக்குகள்)
-
பாலியல் வன்கொடுமை (2 வழக்குகள்)
-
வேறொரு நபருடன் இணைந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல்
மேலும், டொராண்டோவைச் சேர்ந்த ஃபரித் மிர் (24 – Farid Mir) கைது செய்யப்பட்டு, அவர் மீது கீழ்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
பாலியல் நோக்கத்திற்காக இரகசியமாகக் கண்காணித்தல் / பதிவு செய்தல்
-
பாலியல் வன்கொடுமை
-
வேறொரு நபருடன் இணைந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல்
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.