பாலமீன்மடு கிராமத்தில் நிவாரணம் வழங்கலில் முறைகேடு?

மட்டக்களப்பு – பாலமீன்மடு கிராமத்தில் 90 வீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போதும் மாநகரசபை உறுப்பினர் வழங்கிய 25 குடும்பங்களின் பெயர் பட்டியலுக்கு மாத்திரம் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 25 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக பொய் கூறுமாறு பிரதேச செயலாளர் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என கிராம சங்கங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண கடற்றொழில் தொழிற்சங்கத்தின் தலைவர் இ.பத்மநாதன், பிரஜா சக்தி கிராம தலைவர் தேவிபாலா மற்றும் வர்த்தகரான அந்தனிசில் ராஜ்குமார் ஒன்றிணைந்து இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் சிறிய மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் ஒரு சிறிய கிராமம் பாலமீன்மடு கிராமம். இந்த கிராமம் உன்னிச்சையில் குளத்தில் இருந்து மற்றும் அம்பாறை மாவட்ட குளங்களில் இருந்து வரும் வெள்ளநீர் பாலமீன்மடு கிராமத்துக்கு ஊடாகத்தான் கடலுக்கு வழிந்தோடுகிறது.

இவ்வாறு இந்த கிராமம் பெரும் வெள்ளத்தில் பாரிய அனர்த்தத்தை சந்தித்தது. இந்த கிராமத்தில் 410 குடும்பங்கள் இருக்கின்ற போதிலும் 90 வீதமான குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை பதிவிடுவதாக கிராம உத்தியோகத்தர் 11ஆம் திகதி பதிவுகளை மேற்கொண்டார். இவ்வாறு 11 திகதி பதிவுகளை மேற்கொண்டவர் பாதிக்கப்பட்டவர்கள் எவருக்கும் நிதி வழங்காமல் இந்த பதிவு இடம்பெறும் முன்னர் தமிழரசு கட்சியின் மாநகர சபை உறுப்பினர் தான் உட்பட 25 நபர்களுடைய பெயர் பட்டியலை வழங்கியுள்ளார்.

இந்தப் பட்டியலுக்கு அமைவாக வீடு சுத்தப்படுத்த 25 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இது பாரிய மோசடியான விடயம். இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

நாங்கள் 14ஆம் திகதி ஜனாதிபதி காரியாலயத்துடன் தொடர்பு கொண்ட போது உடனடியாக பிரதேச செயலாளரை தொலைபேசியில் இணைத்து இவ்வாறு ஒரு முறைப்பாடு வந்துள்ளதாக தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் பிரகாரம் திங்கட்கிழமை பிரதேச செயலாளரை காரியாலயத்தில் சந்தித்த போது அவர் எங்களை ஏன் ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள். என்னிடம் வந்திருக்க வேண்டும் என்பதுடன் 310 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நிதியை யாரிடம் இருந்து பெற்று வழங்குவது என கூறியதுடன் பாலமீன்மடு கிராமத்தில் 25 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக எங்களை பொய் கூறுமாறு பிரதேச செயலாளர் சொல்லுகின்றார்.

ஜனாதிபதி பாதிக்கப்பட்ட ஒருவர் கூட விடுபடக்கூடாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிதியை வழங்குங்கள் போதியளவு நிதி உள்ளதாக சொல்லுகின்றார்.

எனவே உண்மையில் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு குறித்த நிதியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் கொழும்பு சென்று ஜனாதிபதியிடம் முறையிடுவோம் அல்லது பிரதேச செயலகத்தை முற்றுகையிடுவோம் என கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது