ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் கோல் காப்பாளரான மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான அஸ்தன் வில்லா வினவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வில்லாவின் கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினெஸின் அண்மைய முதுகுப் பிரச்சினைகள் குறித்து அக்கழகம் கவலையடைந்துள்ளதுடன், அவரை பிரதியிட 33 வயதான டியர் ஸ்டீகன் தகுதியானவரெனக் கூறுகிறது.
உலகக் கிண்ணத்தில் ஜேர்மனியின் கோல் காப்பாளராக முதன்மைத் தெரிவாக வேண்டி போட்டி நேரத்தை டியர் ஸ்டீகன் விரும்புகின்ற நிலையில் இன்னொரு லா லிகா கழகமான ஜிரோனா மற்றும் சவுதி அரேபியக் கழகங்கள் அவரைக் கைச்சாத்திட விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.