பாதாள உலக கலாசாரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாச்சாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையிலுள்ளது. தாம் எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சனிக்கிழமை (01) மத்திய கொழும்பு தொகுதியின் கிழக்கு மாளிகாவத்தை மற்றும் கெத்தாராம பிரிவுகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மேம்பாட்டிற்காக நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச அவர்கள் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாச்சாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாச்சாரமே நடைமுறையிலுள்ளது. எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாநகரசபை அதிகாரம், பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி அதிகாரம் போன்றவற்றைத் தன்வசம் வைத்திருக்கும் தற்போதைய அரசாங்கம் கூறிய விடயங்கள், வழங்கப்படும் எனக் கூறிய சலுகைகள், வாக்குறுதிகள் மற்றும் சேவைகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

அபிவிருத்தியால் ஒளிரும் நகரத்தை உருவாக்குவோம் என்ற கூற்றுக்கள் இன்று நிறைவேறவில்லை. அபிவிருத்தி நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பதிலாகப் பாதாள உலக கலாச்சாரமே இயங்குகிறது.

மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, மீண்டும் வீட்டிற்குத் திரும்புவார்களா என்ற நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடக்குமா அல்லது கொலை நடக்குமா என்ற அச்சம் நிலவுகிறது.

நாட்டு மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு கூட இன்று இல்லை. தேசிய பாதுகாப்பும் இழக்கப்பட்டு, இந்த அரசாங்கத்தின் இயலாமையால் சட்டம் ஒழுங்கு குண்டர் கும்பல் மற்றும் பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு ஒவ்வொரு நிமிடமும் அச்சத்திலும் சந்தேகத்திலுமே இயங்குகிறது.

பிரஜாவுரிமை (ஜனநாயகம்) புதைகுழியில் தள்ளப்பட்டுத் தனிப்பட்ட கட்சியின் ஆட்சியை நோக்கி நாடு செல்கிறது. உள்ளுர் சபை தலைவர்கள் கொல்லப்படுதல், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுதல் போன்ற ஜனநாயகத்தை அழிக்கும் சூழ்நிலையில், பாதாள உலகம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு நாடு சென்றுள்ளது.

சட்டம் சீர்குலைந்து காட்டுச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டின் நீதி மற்றும் நியாயம் கிடைக்காத சூழலில் அனைத்து சமூக அமைப்புகளும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பொய்யான கதைகள் பேசாமல், அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு உடனடியாகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்த அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவோம் என்று கூறும் அரசாங்கம், அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தி துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் குண்டர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றார்.

aru

சுமந்திரன் சீற்றம்; அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும்

November 18, 2025

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக்

pu)Nama

புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் – நாமல்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது