பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரைப் பழிவாங்கவே அவரின் சட்டத்தரணியும் மனைவியும் கொலை

க்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாவது துப்பாக்கிதாரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலையைச் செய்த பின்னர் தான் கொட்டாவை வரை காரில் வந்து, அங்கிருந்து இறங்கி கொழும்பு கோட்டையை அடைந்ததாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் கோட்டையிலிருந்து தம்புள்ளை சென்றதாகவும், அங்கிருந்து தமக்காகவே ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரால் தயார் செய்யப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மூலம் மொனராகலைக்குத் தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸார் நடத்திய தேடுதலில், மொரட்டுவை – கொழும்பு வீதியில் ஓடும் ஒரு தனியார் பேருந்தே, தம்புள்ளையிலிருந்து துப்பாக்கிதாரியை மொனராகலைக்கு அழைத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த பேருந்துடன் அதன் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே, கரந்தெனிய சுத்தா என்பவரால் குறித்த பேருந்து 65 இலட்சம் ரூபாவிற்கு சாரதியின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சாரதி, கரந்தெனிய சுத்தாவின் நெருங்கிய சகா என்பதுடன் அவர் ஒரு கடும் போதைப்பொருள் அடிமை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய சுத்தாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே, தாமும் நடத்துனரும் தம்புள்ளை சென்று துப்பாக்கிதாரியை மொனராகலைக்கு அழைத்துச் சென்றதாகச் சாரதி ஒப்புக்கொண்டுள்ளார்.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘லோகு பெட்டி’ என்பவரைப் பழிவாங்குவதற்காகவே, அவரது சட்டத்தரணியைக் கொலை செய்வதற்கு கரந்தெனிய சுத்தா இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம