மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையினால் நாட்டின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (10) திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் தடைகளால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையே இந்த நிலைமைக்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் நாடளாவிய ரீதியில் 12,000க்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் வழங்குவதற்காக தொழில்நுட்பக் குழுக்கள் பணியாற்றி வருவதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் தொடர்ந்தும் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.