பல ஆண்டுகளாக வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தொடரும் மணல் மண் கொள்ளை…

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக மணல் மண் கொள்ளை இடம் பெற்றுவருகின்றது.

சட்ட விரோதமான மணல் மண் அகழ்வு இடம் பெற்றுவருவதை தொடர்ந்து கடந்தமாதம் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான இளங்குமரன் குறித்த பகுதிகளை பார்வையிட்டு தொடர்சியாக மணல் மண் கொள்ளையில் ஈடுபடுவோரது பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் சில நாட்கள் மணல்மண் கொள்ளை நிறுத்தப்ட்டிருந்தது. தற்போது பதினைந்து நாட்களுக்கு மேலாக மணல் கொள்ளை இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.

குறிப்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளான தாழையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி, குடாரப்பு, செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, குடத்தனை கிழக்கு, போன்ற பகுதிகளிலேயே அதிகளாவான மணல் மண் கொள்ளை இடம் பெற்று வருகின்றது.

இயற்கை சமநிலையை பேனுவதற்கான நிரந்தர மர நடுகை எனும் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும் பகுதிகளிலும் பாரிய மணல் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.
குறித்த மணல்மண் கொள்ளை 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் வீதிகளில் தரித்து நிற்கின்றவேளைகளில் கூட இடம் பெற்று வருகின்றது.

தாழையடி பிரதேசத்தில் இடம்பெறும் சட்ட விரோதமாக மண் அகழும் இடத்திற்கும் மருதங்கேணி பொலிஸ் நிலையமும் சுமார் 1kM தொலைவில் உள்ளது. அவ்வாறிருந்தும் இவ்வாறு மணல் கொள்ளை இடம் பெறுகின்றது. இவ்வாறு மணல் மண் கொள்ளை இடம் பெறும் பகுதிகள் பாரிய நீர்த் தேக்கங்களாக காட்சியளிக்கின்றன.

இவ்வாறன மணல் மண் அகழ்ந்து பிரதேசங்களில் குடியிருப்புக்கள் பல உள்ளன. அந் நீர்த்தேக்க்களால் மழை காலத்தில் சிறுவர்கள் உயிரிழக்கக் கூடிய அபாயமும் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இச் சட்ட விரோதமான மணல் மண் அகழ்வுகளில் ஈடுபடும் மண் மாபியாக்களுகதகு உடனடியா நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லை.

மாறாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வழிமறித்து இனந்தெரியாத மண் மாபியா கும்பல்கள் மிரட்டுவதும், நேரடியாக அச்சுறுத்துவதும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.

அண்மையில் ஊடகவியலாளர் ஒருவரது தாயர் வீட்டுக்கு சென்ற ஒருவர் அவர் அங்கு இல்லாத நிலையில் அவ்வீட்டின் கேற்றை தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். இன்னுமொருவர் பாராளுமன்ற உறுப்பினர் தனது நெருங்கிய உறவினர் என்றும் அவர் ஒருபோதும் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றும் நேரடியாக ஊடகவியலாளர் ஒருவரிடம் சவால் விடுத்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் பல சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள் பலர் தமது மணல் மண் வளம் கொள்ளையிடப்படுவது தொடர்பாக துணிந்து கருத்து சொல்வதற்கே அச்சப்படுகின்றனர். காரணம் குறித்த மணல் மண் மாபியாக்கள் பலரை இதுவரை அச்சுறித்தியுள்ளனர். ஆனால் எவரும் முறைப்பாடு செய்வதற்கு கூட அச்சப்படுகின்றனர்.

வடமராட்சி கிழக்கின் வளங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி