பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது!

மூதூர்- நெய்தல்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பல்கலைகழக மாணவரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(25) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள், வங்கி புத்தகமொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூதூர் பொலிஸார் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப்பலகை அகற்றிய விவகாரம்: வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (22) வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குப் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதி பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாகத் தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் அப்பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.

அதற்கமைய வாழைச்சேனை பிரதேச சபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்று முன்தினம் கைப்பற்றிய வாழைச்சேனை பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைக் கைதுசெய்தனர்.

அதேவேளை இதனுடன் தொடர்புபட்ட வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன், பிரதி தவிசாளர், இரண்டு உறுப்பினர்கள் உட்பட நால்வர் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இந்நிலையில் அவர்கள் சார்பில் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தனது தரப்பினர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொருத்தமற்றவை என நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அத்தோடு 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின்கீழ் வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சட்டத்தின் பிரகாரம் பிரதேசசபை தவிசாளர் அதிகாரமுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார். எனவே அந்த அதிகாரத்துக்கு அமைவாகச் செய்யப்பட்ட விடயத்தை ‘பெயர்ப்பலகைகளை அகற்றினார்’ என்று குற்றச்சாட்டாக முன்வைக்கமுடியாது எனவும் சுமந்திரன் வாதத்தை முன்வைத்தார்.

அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை சுமந்திரன் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர். அவ்வாறு முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று சுமந்திரன் கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கடலாம் என்ற காரணத்தினாலும், பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக் கொண்டிருப்பதனாலும் நீதிவானால் ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதற்கமைய வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் உள்ளடங்கலாக ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7SIY5K6KDFHIJECXH6BH3FHLGE

கனடா $27.6 பில்லியன் அமெரிக்க இறக்குமதிகள் மீது பதிலடி வரி விதிப்பு – 

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடியப் பொருட்கள் மீது 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக $27.6 பில்லியன்

462LJO3DBFF6NPN2IULEMMDPRI

வர்த்தகப் போர்: வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவில் கவலையும் புதிய வாய்ப்புகளும்

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான 11-ஆம் மணி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர்

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்

images - 2026-08-25T191417.284

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குடும்பத்தினரிடம் சிபிஐ தீவிர விசாரணை!

August 25, 2026

சென்னை: வழக்கு பின்னணியும் காவல்துறையின் நடவடிக்கையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம்