பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்படும்: அதிபர் அநுர குமார திஸாநாயக்க அறிவிப்பு

பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமொன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படும் என்று அதிபர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆடைத் உற்பத்தித் துறை (Apparel sector) எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளைக் காண்பதற்கென நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அதிபர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இன்று பிற்பகல் அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கையின் ஆடைத் கைத்தொழில் துறையைச் சேர்ந்த முன்னணி வணிகப் பிரமுகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்று இதன்போது அதிபர் வலியுறுத்தினார். அத்துடன், இந்த இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்ட எதிர்காலக் கொள்கைத் திட்டங்களையும் அவர் சுருக்கமாக விவரித்தார்.

ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்குப் பங்களிக்கும் வகையில், கிராமப்புறங்களுக்கும் தங்களது கைத்தொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு முதலீட்டாளர்களுக்கு அதிபர் அநுர குமார திஸாநாயக்க இதன்போது அழைப்பு விடுத்தார்.

முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலைக் கட்டடங்களை அரசாங்கமே எளிதாக்கி வழங்கும் “பிளக் அண்ட் பிளே” (Plug and Play) வழிமுறை குறித்தும் இச்சந்திப்பில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

இவற்றுடன், தற்போதைய வாட் (VAT) வரி முறைமை காரணமாக உள்ளூர் மூலப்பொருள் வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கான சாத்தியமான நிவாரண நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு வணிகத் துறையினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவிரோதமாக ஈட்டப்படும் பணம் நாட்டிற்கு வெளியெ செல்வதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிபர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்கும் அதேநேரம், பொதுமக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதைப் பேணும் வகையிலான புதியதொரு சட்டம், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,