அண்டார்டிகாவின் பரிணாம வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை ஆராய்வதற்காக சீனா தன் 42வது அண்டார்டிகா ஆய்வு பயணக்குழுவை நேற்று அனுப்பி வைத்தது.
உலகின் மிக குளிர்ந்த கண்டமான அண்டார்டிகாவின் இயற்கை வளங்களை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. சீனாவும், அண்டார்டிகாவில் ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே ஐந்து ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளது.