சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் மூன்று போட்டிகளிலும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஒன்பதாமிடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இந்தியாவுக்கெதிரான நான்காவது போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் நாதன் எலிஸ், 11ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
வருண் சக்கரவர்த்தி, 2. ரஷீட் கான், 3. ஜேக்கப் டஃபி, 4. வனிது ஹசரங்க, 5. அடில் ரஷீட், 6. அகீல் ஹொஸைன், 7. நுவான் துஷார, 8. அப்ரார் அஹ்மட், 9. நாதன் எலிஸ், 10. அடம் ஸாம்பா.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,