நோர்த் யார்க்கில் (North York) அதிகாலையில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, நபர் ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
டொராண்டோ காவல்துறையினர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவின்படி, பின்ச் அவென்யூ வெஸ்ட் மற்றும் கீல் ஸ்ட்ரீட் (Finch Avenue West and Keele Street) பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததாக அதிகாலை 2 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த ஒரு நபரைக் கண்டறிந்தனர். அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் சுமார் 5 அடி 6 அங்குலம் முதல் 5 அடி 8 அங்குலம் வரை உயரமுள்ள, குட்டையான கறுப்புத் தலைமுடி கொண்ட ஒரு ஆசிய நபர் என விவரிக்கப்பட்டுள்ளார்.