நுவரெலியா மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75 பேர் இறந்துள்ளதாகவும் 62 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். அவர் நேற்று (1) வெளியிட்ட விசேட உரையில் இதனைக் குறிப்பிட்டார்.

அவர், தொடர்ந்து கூறுகையில் 2691 குடும்பங்களைச் சேர்ந்த 12304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1914 குடும்பங்களைச் சேர்ந்த 8654 பேர் 61 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இடைத்தங்கல் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, தலவாக்கலை, நோர்வுட், நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மோசமான காலநிலைக்கு முன்னர் நுவரெலியா மாவட்டத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 80% பேர் மாவட்டத்தை விட்டு பாதுகாக்க வெளியேறிவிட்டதாகவும் இன்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் மின்சாரம் இல்லை என்றும், அதனால் தொலைபேசி வசதிகள் இல்லை என்றும் மாவட்டச் செயலாளர் மேலும் கூறினார்.

அத்துடன் அதேநேரம் நுவரெலியா கண்டி வீதி, நுவரெலியா – இராகலை வீதி, நுவரெலியா-வெலிமடை வீதி, தலவாக்கலை பூண்டுலோயா வீதி, லிந்துலை -அக்கரபத்தனை வீதி ஆகிய வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

குறிப்பாக மண்சரிவு உள்ளிட்ட பல அனர்த்தங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்று வருகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நிலங்களும் முற்றாக பாதிப்படைந்துள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார் .

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட