யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி மேற்குப் பகுதியில் கசிப்பை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 36 வயதுடையவர் என்றும், அவருடைய உடமையில் இருந்து 5 லீற்றர் கசிப்பும், 20 லீற்றர் கோடாவும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.