“நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லை!” – தவெக வேளாண் பட்ஜெட்டை வெளுத்து வாங்கிய சௌமியா அன்புமணி!

சென்னை

தமிழகச் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட் குறித்துப் பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி கடுமையான விமர்சனங்களையும், சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்! சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வேளாண் நிதிநிலை அறிக்கையின் நிறை குறைகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “இன்றைய வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் பட்டயப் படிப்புக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பும், அவரது பெயரிலும் மற்றும் அஞ்சலை அம்மாள் பெயரிலும் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளும் மனமார வரவேற்கத்தக்கவை. இதற்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், விவசாயத்திற்கு மிக மிக அத்தியாவசியமானத் தண்ணீருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே விவசாயம் முழுமையாகச் செழிக்கும்” எனக் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து தவெக அரசைச் சாடிய அவர், “விவசாயிகளின் மிக முக்கியக் கோரிக்கையான கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாதது பெரும் ஏமாற்றமளிக்கிறது. அதேபோல, நெல் கொள்முதல் விலையை கணிசமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் தானியங்கள் பாழாகாமல் இருக்க நிரந்தர மேற்கூரைகள் அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டால், வெறும் தார்பாய்கள் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். இந்தத் தார்பாய் திட்டம் விவசாயிகளுக்கு எந்தளவுக்குக் கை கொடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

#SoumyaAnbumani #PMK #AgriBudget2026 #TVKGovernment #ThalapathyVijay #TamilNaduPolitics #TNPolitics #Chennai #IrrigationSchemes #FarmersIssue #PaddyProcurement #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNAssembly #TamilNaduNews #PoliticalUpdatesTN

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான