நிலையான வளர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்கியுள்ள இலங்கைக்கு இந்தியா துணைநிற்கும்

இலங்கை அதன் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக, நம்பிக்கைக்குரிய நண்பனாக மற்றும் மிக நெருங்கிய அண்டை நாடாக உறுதியாக நிற்கும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

பொது-தனியார் கூட்டாண்மை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04) கொழும்பு ஐ.சி.டி. ரத்னாதீப ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்திய -இலங்கை வர்த்தக சபை ஆகியவை இணைந்து கலந்துரையாடலைக் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தன.

அதில் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் உரையாற்றுகையில்,

ஆழமான மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதார உறவு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவு புவியியல், வரலாறு மற்றும் கலாசாரம் மட்டுமல்லாமல், ஆழமான மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதார உறவையும் பகிர்ந்து கொள்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, எரிசக்தி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற பல துறைகளில் இரு நாடுகளுக்கும் வலுவான உறவுகள் உள்ளன. நமது நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பாய்ச்சல்கள், நமது செழிப்பு ஒன்றோடொன்று இணைந்தவை என்பதையும், நமது வளர்ச்சி பரஸ்பரமாக இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகின்றன,” .

கடந்த டிசம்பர் 2024இல் இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணம் மற்றும் இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை என்பனவற்றின்போது பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியில் இலங்கைக்குப் பங்காளியாக இருப்பதற்கான இந்தியாவின் ஆழமான மற்றும் நிலையான அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், கடன்-சார்ந்த செயற்பாடுகளுக்கு பதிலாக, வணிகம் சார்ந்த மற்றும் முதலீட்டை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்தியைப் பின்பற்றவும் இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் பொது-தனியார் கூட்டாண்மை ஒரு “திருப்புமுனையாக ” இருந்துள்ளது. இந்த அனுபவம் இலங்கைக்குப் பொருத்தமானது.

தேசிய நெடுஞ்சாலைகள், மெட்ரோ அமைப்புகள் முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வரை, பொது-தனியார் கூட்டாண்மை இந்தியாவின் பொது இலக்குகளை அடைய தனியார் துறையின் புதுமை, திறன் மற்றும் முதலீட்டைப் பயன்படுத்த உதவியுள்ளது.

நகராட்சி சேவைகள், கழிவு மேலாண்மை மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் போன்ற சிறிய அளவிலான பகுதிகளிலும் பொது-தனியார் கூட்டாண்மை கட்டமைப்பானது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொது-தனியார் கூட்டாண்மை இங்கு மாற்றத்தக்கப் பாத்திரத்தை வகிக்க முடியும் என்றும். நமது மக்கள் சேவைக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய தெற்குப் பகுதிக்கும் உத்வேகம் அளிக்கும் கூட்டாண்மை மாதிரிகளை நமது இரு நாடுகளும் இணைந்து உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளிலும் இலங்கைக்கு இந்தியா தனது வலுவான மற்றும் நிலையான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என்றார்.

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா

kesa

பாதாள உலகக் குழுத் தலைவர் கொலை வழக்கு:’கெசல்பெத்தர பத்மே’ விசாரணைக்காலம் அதிகரிப்பு

March 6, 2026

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’வைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற

nor

வடக்கின் சமர் ஆரம்பம்

March 6, 2026

உலகெங்கும் வாழும் யாழ். கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர்களாலும், விளையாட்டு ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும்

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த