நிலுவையில் உள்ள நியமனங்களை வழங்க வேண்டாம் – தமிழரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்

இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் நான்கு பதவிகளுக்கான நிலுவையில் உள்ள நியமனங்களை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும்,

இந்த அலுவலுவகம் உத்தேசமாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஒரு பொறிமுறை எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது.

பெரும்பாலும் நாட்டின் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட மீறல்களுக்கு ஈடுசெய்யும் வகையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. தமிழ் மக்கள் எந்தவொரு உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையையும் அல்லது நல்லிணக்கத்தையும் நிராகரித்து வருகின்றனர்.

ஏனெனில், இந்த நிறுவனங்களின் நியாயமான செயற்பாட்டிலோ சுயாதீனத்தன்மையிலோ அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் மேலே குறிப்பிடப்பட்ட அலுவகத்தைச் சார்ந்த மிகவும் கரிசனைக்குரிய ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்ட இந்தக் கடிதம் எழுதப்படுகின்றது.

பாதுகாப்புத் துறை பின்னணி கொண்ட எந்தவொரு நபரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதால், எங்கள் மக்கள் இத்தனை நாட்களாகக் கூறி வந்ததும், அரசின் மனப்பான்மையையும் உறுதிப்படுத்தும் நிலை உருவாகும். சமீபத்தில் இழப்பீடு செய்யும் அலுவகத்துக்கு நான்கு பெயர்கள் நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.

இதில் இருவர் பாதுகாப்புத் துறை பின்னணி கொண்டவர்கள். இதற்கு மேலாக, ஐந்தாவது உறுப்பினர் மேஜர் ஜெனரல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, வசந்தா பெரேரா (முன்னர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்) மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்படின், ஐந்து உறுப்பினர்களில் மூவர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இத்தகைய அலுவகத்திற்கு ஒருவரும் அந்தத் துறையில் இருந்து வரக்கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.

2025 நவம்பர் 5 அன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஒருமனதாக தீர்மானித்து, தங்களுக்கு வசந்தா பெரேரா மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோரையும் இழப்பீடு செய்யும் அலுவகத்திற்கு நியமிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி எழுத ஒருமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளோம் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

gaze

மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு

March 6, 2026

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

id

இந்தியா – ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

March 6, 2026

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள்

ajar

அண்டை நாடான அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்

March 6, 2026

ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

kat

இந்தியாவில் கரை ஒதுங்கிய மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

March 6, 2026

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக

kum

தூதரகத்தை மூடும் அமெரிக்கா

March 6, 2026

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக

har

சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு; ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் யோசனை?

March 6, 2026

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள

Dengue

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

March 6, 2026

மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக

boa

நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது!

March 6, 2026

இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும்

Pee

பீல் பிராந்திய காவல்துறையின் மக்கள் சந்திப்பு!

March 6, 2026

எங்கள் தெற்காசிய கூட்டு ஐ.எஸ்.என்(South Asian Collective ISN) நடத்திய இரண்டாவது மக்கள் சந்திப்பு நிகழ்வு நெட்வொர்க்கிங் கற்றல் மற்றும்

WhatsApp Image 2026-03-06 at 12.04.15

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிச் சென்ற படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைப் பிரதேசமான குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின்

photo-collage.png (50)

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டம்!

March 6, 2026

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் எங்கள் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தோம். அதற்காக, விண்ட்சர்

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா