நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் புதன்கிழமை (25) நடைபெற்ற ஐந்தாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 3-2 என்ற ரீதியில் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
தென்னாபிரிக்கா: 187/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கோனர் எஸ்டெர்ஹுய்ஸென் 75 (33), றுபின் ஹெர்மன் 39 (31), வியான் முல்டர் 31 (29), டியான் பொரெஸ்டர் ஆ.இ 21 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸக் போக்ஸ் 1/22 [4], ஜொஷ் கிளார்க்சன் 1/14 [2])
நியூசிலாந்து: 154/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பெவன் ஜேக்கப்ஸ் 36 (19), டிம் றொபின்சன் 25 (20), ஜேம்ஸ் நீஷம் 24 (24), டேன் கிளெவர் 22 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெரால்ட் கொயட்ஸி 2/21 [4], ஒட்னெய்ல் பார்ட்மன் 2/33 [4], பிரெனலன் சுப்ராயன் 0/22 [4], ஜோர்ஜ் லின்டி 0/11 [2])
போட்டியின் நாயகன்: கோனர் எஸ்டெய்ஹுய்ஸென்
தொடரின் நாயகன்: கோனர் எஸ்டெய்ஹுய்ஸென்