நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு நிதிக் கடனாளிகள் தகவல்கள் திரட்டல்

நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
சிறு நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குறித்த உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
நாடு முழுவதிலும் சிறுநிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களின் நிலுவைத் தொகை உள்ளிட்ட தகவல்களைத் திரட்டுவதற்கு முன்னோடியாக நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முறையே ஹட்டன், கோரளைப்பற்று தெற்கு, வெலிக்கந்தை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக உபகுழுவின் தலைவர் தெரிவித்தார். இதற்கு அமைய தகவல்களைத் திரட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது அல்லது அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான தலையீட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் கலந்துரையாட சிறுநிதிக் தொழில்துறையினர் சங்கத்தில் புதிவுசெய்யப்பட்ட 34 நிறுவனங்களையும் அழைத்துக் கலந்துரையாடலை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சி.எஸ் சத்துரி கங்கானி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, சுனில் ரத்னசிறி ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Gramajo

டொராண்டோ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மொன்றியலில் கைது!

March 6, 2026

டந்த வருடம் ஜூலை மாதம் டொராண்டோவில் இடம்பெற்ற கொலைக் குற்றத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 24 வயதுடைய பிரையன் ஃபுவென்டெஸ்

Gramajo

டொராண்டோ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மொன்றியலில் கைது!

March 6, 2026

டந்த வருடம் ஜூலை மாதம் டொராண்டோவில் இடம்பெற்ற கொலைக் குற்றத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 24 வயதுடைய பிரையன் ஃபுவென்டெஸ்

sss

கனேடிய சுற்றுலாப் பயணி அவுஸ்திரேலியாவில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

March 6, 2026

அஸ்திரேலியாவில் ஜனவரியில் உயிரிழந்த கனேடிய சுற்றுலாப் பயணி, டிங்கோ தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகே நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள்

saroja

மாத்தறையில் சர்வதேச மகளிர் தினம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

March 6, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில்

jeevan

உயிரிழந்த இளம்பெண் உடல் துஷ்பிரயோகம்: அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்

March 6, 2026

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த

don

அடுத்த கட்டத்தை நோக்கி ஈரானுக்கு எதிரான போர்…

March 6, 2026

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி

e

உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

March 6, 2026

2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி,

ship

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு

March 6, 2026

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல்

suz

கடலில் காணாமல் போனோரை தேடும் பணி முன்னெடுப்பு

March 6, 2026

யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று

bri

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம்

March 6, 2026

தஞ்சம் கோரி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு £40,000 வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக உள்துறைச் செயலாளர்

gaze

மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு

March 6, 2026

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

id

இந்தியா – ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

March 6, 2026

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள்