போதைப் பொருளை இல்லாது ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் “முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலகத்தால் “போதை இல்லா வாழ்வு காண்போம்” எனும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
மணியந்தோட்டத்தில் உள்ள J/89 கிராம சேவகர் அலுவலகத்தில் நல்லூர் உதவி பிரதேச செயலர் பங்கேற்புடன் குறித்த நிகழ்வு நடைபெற்றது,
பிரதேசத்தின் எதிர்கால சிறுவர்களையும் இளைஞர்களையும் ஆரோக்கியமான சமுதாயமாக மீட்டெடுக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் போதைப்பொருள் பாவனையற்ற பிரதேசமாக உருவாக்குவதற்கு சகலது ஒத்துழைப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.