நாட்டின் டிஜிட்டல் நிர்வாக இயக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, GovPAY டிஜிட்டல் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை அதிகாரபூர்வமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை நாடு தழுவிய ரீதியிலான அறிமுகமானது கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நிறைவடைந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வாகன சாரதிகள் எந்த இடத்திலிருந்தும் மின்னணு முறையில் போக்குவரத்து அபராதங்களை செலுத்தவும், தாமதமின்றி தங்கள் ஓட்டுநர் உரிமங்களை உடனடியாக மீட்டெடுக்கவும் அனுமதிக்கிறது.
இந்த தளம் ஏற்கனவே 86,000 இற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் ரூ. 115 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் வசூல்கள் ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.