நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக அரசியல் கள பின்னணியில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிளடி பாலிடிக்ஸ்’ என பெயரிடப்பட்டு , அதற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளடி பாலிடிக்ஸ் ‘ திரைப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன் , ரோபி ,பி. வாசு, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ் .இசையமைத்திருக்கிறார். அரசியல் கள பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிராஃப்ட் பை ஜி கே பி நிறுவனம் மூலம் இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொடியும் , கொடிக்கம்பமும் முக்கியமானது முதன்மையானது என்பதை விவரிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பிடித்திருப்பதும் இன்றைய அரசியல் நிலவரம் குறித்த யதார்த்தத்தை விவரிக்கும் காட்சிகள் இருப்பதாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.