திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கின்றார்கள். அதன் விளைவு தான் த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜீ தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 5ஆண்டுகளாக திமுக ஆட்சி நடத்திய விதம் மக்களுக்கு மட்டுமல்ல அரசியல் கட்சிகளுக்கும் திருப்திகரமாக இல்லை.
மேலும் மக்களை ஏமாற்றி விட்டார்கள் .விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாதது. சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் அமளிக்காடாக, அதிலும் போதைப்பொருட்கள் கலாச்சாரத்தின் மையமாகவே தமிழகத்தை பயன்படுத்தும் அளவில் இன்றைக்கு பாலியல் வன்கொடுமை. கொலை, கொள்ளை என இவையெல்லாம் இந்த தேர்தலில் மக்கள் மனதில் எதிரொலிக்கும்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் ஏதோ கூட்டணி தர்மத்திற்காக இரண்டு மூன்று தேர்தலில் இருந்த காரணத்தினால், இதுவரை இருந்தார்கள் இப்பொழுது ஏதாவது ஒரு சாக்கு சொல்லி எண்ணிக்கையின் அடிப்படையில் காரணத்தை சொல்லி, திமுகவில் இருந்து கட்சிகள் வெளியேற ஆரம்பித்திருக்கின்றன அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.