தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும் எனவும் முன்னாள் அமைச்சரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் கொட்டகலையில் அண்மையில் இடம்பெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

“மலையக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தமிழ் முற்போக்கு கூட்டணியே முன்னெடுத்துள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எங்களுக்குக் கிடைத்த நான்கு ஆண்டுகளில் உட்கட்டமைப்பு மற்றும் உரிமை சார்ந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். ஆனால், அக்காலகட்டத்தில் எங்களைச் கடுமையாக விமர்சித்தார்கள். நான் வீடுகளைக் கட்டியபோது அவற்றை ‘குருவிக்கூடு’ என்று எள்ளி நகையாடினார்கள். காணிப் பத்திரங்களை வழங்கியபோது, அவை சட்டரீதியானவை அல்ல என்று கூறினார்கள். எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சித்தவர்கள், இன்று ஆட்சிக்கு வந்து என்ன செய்துள்ளார்கள்?

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது, 4,000 இந்திய வீடுகளை நிறைவு செய்வதாக அமைச்சர் சமந்த வித்தியாரத்ன உறுதியளித்திருந்தார். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை. எமது காலத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 4,000 வீடுகளையும், இலங்கை அரசாங்கத்தின் நிதியில் மேலதிகமாக 4,000 வீடுகளையும் நிர்மாணித்து, அவற்றுக்கான காணி உரிமைகளையும் மக்களுக்கு வழங்கினோம்.

கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் அன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் எங்களைக் கடுமையாகச் சாடியிருப்பார்கள். ஆனால், தற்போது இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? இது குறித்து நீதியான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியமாகும்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் அரச நிதியை வழங்க முன்மொழிந்தபோது, நாம் மக்களுக்காக அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதையும் விமர்சிப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது. அரசாங்கம் வழங்கியுள்ள இந்த 200 ரூபாய் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு சம்பள உயர்வுப் போராட்டம் தேவைப்படும்.

எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வாகத் தொழிலாளர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும். இதையே நாம் தற்போதைய அரசாங்கத்திடமும் வலியுறுத்துகின்றோம். சஜித் பிரேமதாசவின் எதிர்கால ஆட்சிக் காலத்தில் இதனைச் செயற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

thiga

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

March 8, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே

ne

நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

March 8, 2026

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரில்,

van

செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

March 8, 2026

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட

va

வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

March 8, 2026

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு

lax

தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

March 8, 2026

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

vi

உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

March 8, 2026

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை

st

பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு…

March 8, 2026

திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும்.

e

தமிழக சட்டமன்றத் தேர்தல்; உங்கள் வாக்குக்கு நான் வரிசெலுத்த முடியாது – வினோதினி

March 8, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்

vij

விஜய் – சங்கீதா விவாகரத்து: ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு?

March 8, 2026

விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் புது திருப்பமாக நீதிமன்றத்திற்கு வெளியே பேசி ரூ. 225 கோடி கொடுத்து எல்லாம் முடிவாகிவிட்டதாக

san

துப்பு துலக்கும் நிபுணராக சந்தானம்…

March 8, 2026

கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருபதாவது திரைப்படத்தில் நடிக்கும் சந்தானம்.. அப்படத்தில் கால பயணத்தின் அடிப்படையில் துப்பு துலக்கும் நிபுணராக

tez

‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

March 8, 2026

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு

po

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ பிளடி பாலிடிக்ஸ்’

March 8, 2026

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக அரசியல் கள பின்னணியில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு