தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், களனி – வனவாசல பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
மாலம்பே – கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.