தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக தேர்தல் களத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கொள்ள உள்ளது.வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார், அறிக்கை அரசியல் என வைக்கப்பட்ட விமர்சனத்தை உடைக்கும் வகையில் மக்கள் சந்திப்பை விஜய் முன்னெடுத்தார். கடந்த ஆண்டு கரூர் சம்பவம் முதல் ஜனநாயகன் தணிக்கை சான்று வரை தொடர்ந்து வழக்குகளில் சிக்கி வருகிறார்.

இது அவருக்கு நெகட்டிவாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதனை தகர்த்தெறியும்படி இருந்தது தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம். தொடர்ந்து மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார் விஜய்.இதற்கிடையே, கட்சித் தொடங்கிய போது தவெகவுடன் கூட்டணி அமைத்தால்,ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று கூறினார். இதில், விசிக இணையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குண்டை தூக்கி எறிந்தது. இதனால், திமுக அதிர்ச்சி அடைந்தது. மறுப்புறம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனால், திமுகவை விட்டு வெளியேறி காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சொன்ன போலிட்டிகல் பார்ம் வொர்க்காமல் போனது. இதனால் விஜய் போட்டு இருந்த கூட்ட்ணி கணக்கும் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில்,விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வை விஜய் மீது.காரணம் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியது.இது அவரது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னை நடந் த பிரபல தயாரிப்பாளர் நிகழ்ச்சில் விஜய் கலந்துக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

.இதனால்,சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்லைவர்கள் மற்றும் நடிகை கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனும் கூறியிருந்ததார். இது பேசுப்பொருளானது. இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :நடிகர் விஜயின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. அதேபோல் அவரது அரசியல் வருகை பற்றியும் நான் கருத்து தெரிவிக்கவில்லை.

விஜயை நான் மரியாதையுடன் நடந்து கொள்கிற, அமைதியான இணை நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறேன். மேலும் அவரது தாயாரைப் பற்றியும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உள்ளது. எனக்கு தெரிந்த தகவல் அதுவரை மட்டுமே.

சமீபத்தில் நான் மேடையில் பேசிய சில வரிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவை விஜயின் அரசியல் வருகையுடனும் தற்போது அவரது தனிப்பட்ட விஷயங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் மக்கள் தனித்தனியாக புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்றும், தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயத்திற்கு தேவைக்கு மீறிய கவனம் கிடைக்கிறது போல தெரிகிறது என்றும் மட்டுமே நான் கூறினேன்.

மேலும் ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூற விரும்புகிறேன். பெண்களின் உரிமைகள் குறித்து உண்மையாகவே அக்கறை இருந்தால், சமூகத்தில் இன்னும் பல பெண்கள் வன்முறை மற்றும் அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு சட்ட உதவி, பொருளாதார பாதுகாப்பு, சில நேரங்களில் அன்றாட உணவுக்கூட இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கும் நம்முடைய கவனமும் ஆதரவும் சம உரிமை கிடைக்க வேண்டும்.எனவே, எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் தவறான புரிதலை சரிசெய்யவும் இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

thiga

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

March 8, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே

ne

நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

March 8, 2026

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரில்,

van

செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

March 8, 2026

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட

va

வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

March 8, 2026

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு

lax

தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

March 8, 2026

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

vi

உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

March 8, 2026

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை

st

பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு…

March 8, 2026

திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும்.

e

தமிழக சட்டமன்றத் தேர்தல்; உங்கள் வாக்குக்கு நான் வரிசெலுத்த முடியாது – வினோதினி

March 8, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்

vij

விஜய் – சங்கீதா விவாகரத்து: ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு?

March 8, 2026

விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் புது திருப்பமாக நீதிமன்றத்திற்கு வெளியே பேசி ரூ. 225 கோடி கொடுத்து எல்லாம் முடிவாகிவிட்டதாக

san

துப்பு துலக்கும் நிபுணராக சந்தானம்…

March 8, 2026

கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருபதாவது திரைப்படத்தில் நடிக்கும் சந்தானம்.. அப்படத்தில் கால பயணத்தின் அடிப்படையில் துப்பு துலக்கும் நிபுணராக

tez

‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

March 8, 2026

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு

po

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ பிளடி பாலிடிக்ஸ்’

March 8, 2026

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக அரசியல் கள பின்னணியில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு