தேசிய ஒலிம்பிக் நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும் தேர்தல் நடத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான (NOC) புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை நடத்த ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் தலைமையிலான நிறைவேற்றுச் சபை குழுவினர் தவறினால் அதன் உறுப்பு சங்கங்கள்/சம்மேளனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஊடகவியலாளர்கள் மத்தியில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர் எச்சரித்தார்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய நிறைவேற்றுச் சபையின் பதவிக் காலம் 2025 டிசம்பர் 27ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் அடுத்த நான்கு ஆண்டுகள் கொண்ட தவணைக்கான புதிய நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை நடத்துவது சுரேஷ் சுப்ரமணியம் தலைமையிலான நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களின் தலையாக கடமை எனவும் அவர் கூறினார்.

தற்போது தடயவியல் கணக்காய்வு நடைபெற்று வருவதால் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் சாக்குப்போக்கு கூறிவருவதாகவும் ஜஸ்வர் உமர் சுட்டிக்காட்டினார்.

அப்படியானால் இலங்கையில் உள்ள சகல விளையாட்டுத்துறை சங்கங்களும் இதே போன்று சாக்குப் போக்குகளைக் கூறி தேர்தலை பின்போட முடியுமா? அதனை இலங்கை விளையாட்டுத்துறை யாப்பு விதிகள் அனுமதிக்குமா? என்ற கேளவிகளை ஜஸ்வர் உமர் எழுப்பினார்.

தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவருக்கு எதிராக தனக்கோ, தேசிய ஒலிம்பிக் குழுவின் 31 உறுப்பு சங்கங்களுக்கோ தனிப்பட்ட பகைமையோ பழிவாங்கும் எண்ணமோ இல்லை எனவும் அவர் கூறினார்.

என்றாலும் தேசிய ஒலிம்பிக் குழுவின் யாப்பு விதிகளை மீறும் வகையில் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் நிறைவேற்றுச் சபைக் குழுவினர் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால் அதனை அனுமதிக்கப் போவதில்லை என ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபையில் ஏற்பட்ட பதவி வெற்றிடங்களுக்கு ஒலிம்பிக் யாப்பு விதிகளுக்கு முரணான வகையில் தேர்தல் நடத்தப்படாமலும் பொதுச் சபையின் ஒப்புதல் இல்லாமலும் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜஸ்வர் உமர், அவர்கள் 6 பேரும் தாங்களாகவே விலகிக்கொள்வது நல்லது என கூறினார்.

‘2018இல் சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட யாப்பு விதிகளின் 6ஆம் இலக்க பரிந்துரையில், ஒரு பதவிக்கு வெற்றிடம் ஏற்படும்போது பொதுச் சபைக் கூட்டத்தில் தேர்தல் மூலம் அப் பதவி நிரப்பப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுவரை பொதுச் சபை கூட்டப்படவும் இல்லை தேர்தல் நடத்தப்படவும் இல்லை’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மிகவும் பொறுப்பு வாய்ந்த, கணக்குவழக்குகளைக் கையாளும் பொருளாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்படும்போது அப் பதவிக்கு ஒருவரைத் தெரிவுசெய்யும் பொறுப்பும் உரிமையும் ஒலிம்பிக் குழுவில் அங்கம் வகிக்கும் 31 சங்கங்களுக்கு இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாப்பு விதிகளுக்கு முரணான வகையில் பொருளாளர் நியமிக்கப்பட்டது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ அரச வங்கிக்கும் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

நிதி பரிவர்த்தனைகளில் கையொப்பங்கள் வேறுபட்டிருந்தால் கவனமாக இருக்குமாறும் பணம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட வங்கி, ஒலிம்பிக் குழுவின் கணக்கை இடை நிறுத்தி வைத்தது. இது நடந்து பல மாதங்கள் கடந்த நிலையில் நிறைவேற்றுக் குழுவிற்கோ அல்லது தலைவருக்கோ அறிவிக்காமல் வங்கிக்கு எவ்வாறு தகவல் கொடுத்தீர்கள் என எங்களிடம் இப்போது விளக்கம் கோரப்படுகின்றது. எதிர்காலத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் எனது பதவியை இழப்பேன் என்றும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் ஜஸ்வர் உமர்.

‘எங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனுப்பப்பட்டுள்ள கடிதமும் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. அந்தக் கடிதம் சுப்ரமணியத்தின் எதிரியால் அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் அந்தக் கடிதத்தில் சுப்ரமணியத்தின் கையொப்பத்திற்கு பதிலாக அவரது கையொப்ப முத்திரை (சீல்) பதிக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் குறிப்பிடப்பட்ட திகதியன்று சுப்ரமணியம் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். விளக்கம் கோரி அனுப்பப்பட்ட கடிதத்தில், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கடித தலைப்பில் கடிதம் அனுப்பபடவில்லை என்றும் நான் தனிப்பட்ட முறையில் கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் என முகவரியிட்டு என்னிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எங்கள் சட்டக் குழு மூலம் நாங்கள் பதிலளிப்போம்’ என்று ஜஸ்வர் உமர் கூறினார்.

இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் விரைவில் குணமடைந்து நாடு திரும்பி தேர்தலை நடத்தி இப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, துபாய் வைத்தியசாலை ஒன்றில் தற்போது சிகிச்சை பெற்று தேறிவரும் தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்திடம் வினவியபோது, ‘தேசிய ஒலிம்பிக் குழுக்கள் மற்றும் ஒலிம்பிக் இயக்கத்தின் மீது சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு உச்ச அதிகாரம் இருப்பதாகவும் தேசிய ஒலிம்பிக் குழுக்களின் தேர்தல்களை மேற்பார்வையிடவும் தாமதப்படுத்தவும் முடியும் எனவும் பதிலளித்தார்.

தற்போது தடயவியல் கணக்காய்வு நடைபெற்றுவருவதால் தேர்தல் நடத்த முடியாமல் இருப்பதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழுவும் ஆசிய ஒலிம்பிக் பேரவையும் இணங்கிய பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து