தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 ஆரம்பம்!

தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 நேற்றைய தினம் (19ஆம் திகதி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் ஆரம்பமானது.

சபாநாயகர் கௌரவ ஜகத் விக்ரமரத்ன மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் கௌரவ தினிது சமன் ஹேன்னாயக்க ஆகியோரின் தலைமையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் சுபுன் விஜேரத்ன அவர்களின் பங்கேற்புடன் இந்நிழ்வு நடைபெற்றது.

​அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் வீரர் வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர். பிரதேச மற்றும் மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து இந்த தேசிய மட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இன்று (20ஆம் திகதி) தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், நிறைவு விழா எதிர்வரும் 21ஆம் திகதி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே தலைமையில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது.

​இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் தினிது சமன் ஹேன்னாயக்க, அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய இளைஞர் சக்தி, இலங்கையின் வலிமையான தன்னார்வ இளைஞர் இயக்கமான ‘யூத் கிளப்’ (Youth Club) அமைப்பிடமே உள்ளது எனக் குறிப்பிட்டார். இந்த இளைஞர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், விளையாட்டின் மூலம் உருவாகும் கூட்டு முயற்சி மற்றும் சுறுசுறுப்பு அதற்கு பெரும் துணையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

​தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இங்கு உரையாற்றுகையில், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் கூற்றை மேற்கோள் காட்டி, “திறமை என்பது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவது மட்டுமல்ல, நாம் வீழ்ச்சியடையும் போது எவ்வளவு விரைவாக மீண்டும் எழுகிறோம் என்பதாகும்” எனக் குறிப்பிட்டார். எனவே, அனர்த்தங்களிலிருந்து நாடு மீண்டும் எழுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும், தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 ஐ நடத்துவது நாடாக மீண்டும் எழுவதற்கான ஒரு படியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

​இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, தேசிய இளைஞர் கழகங்களின் சம்மேளனச் செயலாளர் மிதின கிஹான் பிரியசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான இளைஞர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து