தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa

பாகிஸ்​தான் – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லாகூரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 378 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 67 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 216 ரன்​கள் எடுத்​தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்​களும், செனுரன் முத்​து​சாமி 6 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 84 ஓவர்​களில் 269 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தனது 2-வது சதத்தை விளாசிய டோனி டி ஸோர்ஸி 171 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 104 ரன்​கள் எடுத்து நோமன் அலி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

செனுரன் முத்​து​சாமி 11, பிரேனலன் சுப்​ராயன் 4, காகிசோ ரபாடா 0 ரன்​களில் வெளி​யேறினர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் நோமன் அலி 6, சஜித் கான் 3 விக்​கெட்களை வீழ்த்​தினர். 109 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 46.1 ஓவர்​களில் 167 ரன்​களுக்கு சுருண்​டது.
அதி​கபட்​ச​மாக பாபர் அஸம் 42, அப்​துல்லா ஷபிக் 41, சவுத் ஷகீல் 38 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் செனுரன் முத்​து​சாமி 5, சைமன் ஹார்​மர் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

இதையடுத்து 277 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 22 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 51 ரன்​கள் எடுத்​தது. எய்​டன் மார்க்​ரம் 3, வியான் முல்​டர் 0 ரன்​களில் நோமன் அலி பந்​தில் வெளி​யேறினர். ரியான் ரிக்​கெல்​டன் 29, டோனி டி ஸோர்ஸி 16 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். கைவசம் 8 விக்​கெட்​கள் இருக்க வெற்​றிக்கு மேற்​கொண்டு 226 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் தென் ஆப்​பிரிக்க அணி இன்று 4-வது நாள்​ ஆட்​டத்​தை எதிர்​கொள்​கிறது. லாகூர் மைதானத்தில் இதற்கு முன்னர் அதிகபட்சமாக வெற்றிகரமாக துரத்தப்பட்ட இலக்கு 208 ரன்கள்தான். கடந்த 1961-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் இலக்கை எட்டிய அணி என்ற சாதனையை படைக்கும்

HinduTamil

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது