உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராகப் பதவியேற்றுள்ளார்.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாட்டுக்குப் பயணமாவதன் காரணமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன நாடு திரும்பும் வரை நீதிபதி எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசராகப் பணியாற்றுவார்.