பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினர், பாக் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, இருநாடுகள் இடையே மோதல் வெடிக்க, இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்குதலில் இறங்கினர். இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், உலக நாடுகளின் தலையீடு எதிரொலியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனாலும், முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து துருக்கியில் இரு தரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை.