கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருபதாவது திரைப்படத்தில் நடிக்கும் சந்தானம்.. அப்படத்தில் கால பயணத்தின் அடிப்படையில் துப்பு துலக்கும் நிபுணராக நடித்து வருகிறார் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சந்தானம், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டி எஸ் ஆர், ஃபௌசி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். புதிய கால பயணத்தின் அடிப்படையில் கிரைம் திரில்லராகவும், இன்வெஸ்டிகேட்டட் திரில்லராகவும் தயாராகும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் கே 7 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. ஜே. கணேஷ் – விஜய் கே. செல்லையா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் , விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.