திருவள்ளூர்:
பெரியபாளையம் அருகிலுள்ள கண்ணிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு, பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இதுவரை 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. விபத்து நடந்த தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர் பணியாளர்கள் உயிரிழப்பு காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமும் சோகமும் சூழ்ந்துள்ளது.
#Thiruvallur #AmmoniaGasLeak #IndustrialTragedy #FactoryAccident #Periyapalayam #TamilNadu #TamilNews #BMNews #BreakingNewsTN #AccidentAlert #SafetyViolation #IndustrialSafety #TamilNaduNews #RescueOperations #JusticeForWorkers #Tragedy #TamilNaduNewsLive #TamilNewsUpdate #WorkersSafety #NewsAlert #TamilNaduGovernment #Investigation #EmergencyServices