திருமலை முத்துநகர் விவசாயிகளின் பிரச்சினை குறித்து பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 குடும்பங்கள் தங்களது விவசாய நிலங்களை இழந்ததன் காரணமாக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இந்த பயிர் சீசனுக்கான நெல் பயிரிடும் பணிகளும் தாமதமாகியுள்ளது.

இத்தகவல் தொடர்பாக அரசாங்கத்துடன் பலமுறை கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் இதுவரை தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை. சுமார் ஒரு ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் விவசாயிகளை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அதுவும் மேலும் தாமதமடைந்த நிலை காணப்படுகிறது.

இதனால் இன்று வியாழக்கிழமை (13) கொழும்பில் முத்துநகர் விவசாயிகள் பிரதமர் செயலாளர் அலுவலகத்துடன் இணைந்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அந்த சந்திப்பில் பிரதமர் அலுவலகம், இந்த பிரச்சினையில் தங்களது தலையீட்டினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தது. மேலும், விவசாயிகள் அங்கு நிலவும் சிக்கலான சூழ்நிலையையும், சில அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்கள் பொய்யான தகவல்களை வழங்கி விவசாய நிலங்களை அபகரிக்க முயல்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினர். அதேவேளை அவர்கள் தீர்வுக்கான சில யோசனைகளையும் முன்வைத்தனர்.

இதன் விளைவாக, அடுத்த 10 நாட்களுக்குள் திருகோணமலையில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் மற்றொரு கலந்துரையாடலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முத்துநகர் விவசாயிகள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்று 58 ஆம் நாளாகவும் திருகோணமலையில் தொடர்கிறது.

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.