கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையானது கடந்த நாட்களில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட வன்முறை கார் பறிப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் எட்டு திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக பீல் பிராந்திய காவல்துறை, டொராண்டோகாவல்துறை, ஒன்டாரியோ மாகாண காவல்துறை மற்றும் கனடா எல்லை சேவை நிறுவனம் (Agence des services frontaliers du Canada) ஆகியவற்றின் உதவியுடன் மேற்படி செயற்பாட்டை பீல் பிராந்திய காவல்துறை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாரிய விசாரணை முன்னெடுப்புக்குப் பின்னர்
· 8 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன ($800K).
· 2 போலி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
· 6 பேர் கைது செய்யப்பட்டனர், 30 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ehq;fs; தொடர்ந்து Kd;ndLf;Fk; முன்னெச்சரிக்கை முயற்சிகளின் காரணமாக, பீல் பிராந்தியம் முழுவதும் நீண்டகால பாதுகாப்புத் தன்மையை நாம் காண்கிறோம் எனவும் பீல் பிராந்திய காவல்துறை தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.
· கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது வாகன திருட்டு 20% குறைந்துள்ளது.
· கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது கார் பறிப்புகள் 79% குறைந்துள்ளது.
· $10 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனவும் பீல் பிராந்திய காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.